இன்று எமது கல்லூரித்தாய் நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கிறாள். பல்லாயிரம் மாணவ செல்வங்களை வளர்த்தெடுத்து , தமிழர் தேசத்தில் தன்னிகரில்லா கல்விகூடமாக விளங்கும் எமது கொக்குவில் இந்துக் கல்லூரி இன்று தனது நூறாவது ஆண்டில் காலடி பதிப்பதில் கொக்குவில் இந்துவின் பிள்ளைகள் நாங்கள் பூரிப்படைகின்றோம்.
கல்வியும் தமிழர் தம் கலாச்சாரமும் , ஒழுக்கமும் கண்ணென போற்றும் கல்லூரியின் பாரம்பரியம் கல்லூரிக்கென தனித்துவமான அடையாளமாய் மிளிர்வது பெருமிதத்திற்குரியது.
உலகெங்கும் , திசையெங்கும் உந்தன் பிள்ளைகள் நாங்கள் நிமிர்ந்து வாழ்வதற்க்கு இன்றுவரை வழிகாட்டும் அன்னையாய் நீயே இருக்கின்றாய். கற்றதொழுகு எனும் அந்த மந்திரம் பற்றி சுழர்கிறது எங்கள் வாழ்வு. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் உந்தன் பணி தொடர எங்கள் வாழ்த்துகள்.