எமது கல்லூரியின் உப அதிபர் திருமதி புனிதவதி மகேஸ்வரன் அவர்கள் ஓய்வு பெற்றுள்ளார். மாணவர் வளர்ச்சிக்காக அயராது உழைத்து , தனது அறுபதாவது வயதில் இளைப்பாறும் ஆசிரியர் அவர்களுக்கு கல்லூரிச் சமூகம் நன்றியுடன் விடைதருகின்றது.
இந்துக்களின்
பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும்
கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையேயான இரண்டு நாட்கள் துடுப்பாட்டப்
வெற்றி தோல்வி இன்றி சம நிலையில் முடிவுற்றது.
எங்கள் கல்லூரி 2010ம் ஆண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாடவுள்ளது. அதற்காக நூற்றாண்டு விழா மலர் ஒன்றினை வெளியிடுவதற்கான மலர்க்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.இக் குழு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் கல்லூரியின் பழைய மாணவர்களிடமிருந்து வரலாற்று தகவல்களை திரட்டும் நோக்குடன் இந்த அறிவித்தலை முன்வைக்கின்றது.
எங்கள் கல்லூரி 2010ம் ஆண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாடவுள்ளது. இவ்
விழாவிற்க்காக பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறோம். இம்
முன்னெடுப்புக்களில் முதன்மையான செயற்திட்டம் விளையாட்டு மைதானத்தை
விஸ்தரித்தலாகும்.