கல்லூரியின் பிரதி அதிபராக, ஆசிரியராக அயராது இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி 14.01.2010 இல் ஓய்வு பெறும் திரு.க.மோகனதாஸ் அவர்களை உளமார வாழ்த்துவதோடு அவருக்கு இறைவன் நல்ல உடல் அரோக்கியத்தையும் மகிழ்வான வாழ்க்கையையும் தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.
இன்று எமது கல்லூரித்தாய் நூற்றாண்டில் காலடி
எடுத்து வைக்கிறாள். பல்லாயிரம் மாணவ செல்வங்களை வளர்த்தெடுத்து , தமிழர்
தேசத்தில் தன்னிகரில்லா கல்விகூடமாக விளங்கும் எமது கொக்குவில் இந்துக்
கல்லூரி இன்று தனது நூறாவது ஆண்டில் காலடி பதிப்பதில் கொக்குவில்
இந்துவின் பிள்ளைகள் நாங்கள் பூரிப்படைகின்றோம்.
நல்லூர் கல்விக் கோட்டமட்ட பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியுடன் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் கொக்குவில் இந்து சம்பியனாகியது.